guru

Friday, 24 February 2012

அப்பரைசல் என்ற கொடுமை...

எவண்டா  கண்டுபிடிச்சது இந்த அப்ரைசல் கல்சரை...

நம்மால முடிஞ்ச ஆணிய தினமும் புடிங்கி புடிங்கி வருஷ கடைசில டயர்ட் ஆகி இருக்கும் போது வரும் பாருங்க இந்த அப்ரைசல் என்ற உருபடா மேட்டர்...

சொல்வான் பாருங்க மேனேஜர்-ங்கிற சூபர்வைசர்.... நீ வருஷம் புல்லா ஒரு ஆணி கூட புடுங்கல அப்படின்னு சொல்வான் பாருங்க...அப்ப வரும் பாருங்க ஒரு கெல வெறி... டேய் வருஷம் புல்லா கண்டுபுடிக்காததை  எப்படி இந்த அப்ரைசல் டைம்-ல மட்டும் சிபிஐ வச்சி இவனுங்க புதுசா கண்டுபிச்ச்னகன்னு நமக்கு பயங்கர ஆச்சர்யம் வரும் பாருங்க...

நாய் மாதிரி வீக் எண்டு எல்லாம் ராப்பகலா வேலை பார்த்தேன்னு சொன்னா.... அது உன் டுட்டி....அதுக்கு மேல என்ன பண்ணேன்னு கேட்டா...என்ன சொல்றது...

பொண்ணுங்க கிட்ட கடலை போடறது...ஜால்ரா கோஷ்டி வச்சிகிறது....

1) why pro-actively u didn't plan.?
2) what is stopping you from finishing it on time?
3) why pending clarification is not timely escalated.?
4) When requirement is not clear, whey u started the work item.?

இந்த மாதிரி வெருப்பு எத்தற கெள்விகள கேட்கறது மட்டும் தான் மேனேஞ் மென்ட்-ன்னு நம்மள எத்தன ஆணி புடுங்கன அப்படின்னு கேட்பனுங்க பாருங்க...

சீன் போடுறவங்களையும், ஆன்டி ஆனாலும் உடம்பு காட்டுற கொருங்கு களுக்கு மட்டும் கொடுபனுங்க பாருங்க ரைட்டிங்....  :-)

நாம வேலையையும் பார்த்திட்டு .... சீன் போடுற நாய்களுக்கு அடிமையா இருந்து முடின்ச ஆணி புடுங்க பெரிய ட்ரைனிங் வேணும்...

முக்கியமா மானமே இல்லாம சொம்ம்பா இருக்கணும்...

அப்பதான் அப்ரைசல் ரைடிங் நல்லா வரும்...

இல்லன்னா ரைட்டிங் நொண்டி அடிக்கும்...

நம்மக்குன்னு இறுக்கவே இருக்கு லோ ரைட்டிங்...

நம்ம சஞ்சு மாதிரி ஒரு டீம் மேட் இருந்தா அட்லீஸ்ட் வேடிக்கை பார்த்தாவது மனசை தேத்திபோம்....


அப்ரைசல்லாவது மண்ணாவது... அத கொடுமைய மறந்து அழகான ஒன்ன பத்தி நினைச்சுப்போம்....
உலகம் ரொம்ப அழகுதான் இல்லையா...? ஹி ஹி ஹி...

Thursday, 23 February 2012

இன்றைய தத்துவம்


நம்மால முடியாதுன்னு நினைக்கறத யாரோ எங்கயோ ட்ரை  பண்ணிட்டுதான் இருகாங்க...!!!


நாம செய்ய முடியாம அவமானமோ தோல்வியோ படும்போதுகூட யாரோ எங்கயோ சாதிச்சிட்டுதான் இருகாங்க...!!!

அதுனால ட்ரை பண்ணரதை விட்ராதீங்க ....!!!!

( நான் சொன்ன யாராவது கேட்பாங்கலா சஞ்சு சொன்னாவாவது கேட்பாங்கன்னு ஒரு நல்ல எண்ணம் தான்....!!!  )



Wednesday, 22 February 2012

ஹலோ உலகமே...!!!

ஹலோ உலகமே...!!!  (ஹலோ வேர்ல்ட்-க்கு தமிழாக்கம்)....



ப்ளாக் எழுதறது இப்ப அவுட் ஆப் பேஷன் ஆயிடுச்சி...சும்மா ஒரு ஜாலிக்கு நானும் ட்ரை பண்ணறேன்...ம்ம் என் ப்ளாக்-ய் எவன் பார்பான் ....???....நானே பார்த்திட்டதான் உண்டு...

கொய்யால எதாவது போபுலர் ஆகாத ப்ளோக கோப்பி பேஸ்ட் பண்ணலாமா...??(எல்லாம் தொழில் பழக்கம் தான்..)

இல்ல ஜாலியா எதாவது விமர்சனம் எழுதலாமா...??? 

இருக்கவே இருக்கு அரசியல்வாதிய திட்றது... அவனவன் முடிஞ்ச பிராடு பண்ணி பெரிய ரெகார்ட் வச்சிருக்கன் ...அதை எழுதலாமா...???

படிப்பை பத்தி எழுதலாமா ... ஆனா படிப்புக்கும் எனக்கும் ரொம்ப தூரமாச்சே....பாஸ் பண்ணதே பரமன் புண்ணியம்....

காதலை பத்தி எழுதலாமா..???  படிப்பாச்சும் பரவாயில்லை ...ஏதோ முட்டி மோதி பாஸ் பண்ணியாச்சி.....இப்ப இருக்குற எல் கே ஜி பசங்க கூட ரொம்ப தெளிவா வொர்க் அவுட் பண்ணிடுவாங்க ஆனா எனக்கு சுட்டு போட்டா கூட ஒன்னும் வொர்க் அவுட் ஆனதில்லை....மொக்க பிகரு கூட தல தெறிச்சி ஒடுடிடும்...




பார்முலா பார்முலா -ன்னு ரொம்ப சொல்லுவாங்க....பார்க்க கப்பி மாதிரி இருப்பானுங்க....அவனுங்க எல்லாம் சூப்பரா ஒன்ன தேத்தி வச்சிருபனுங்க...

நம்மக்கு மட்டும் ஒன்னுமே வொர்க் அவுட் ஆகாது...

தாஸ் புஸ் -ன்னு இங்கிலிஷ்ல சீன் போட கூட வரமாட்டேங்குது... அப்படி ஏதும் ரிஸ்க் எடுத்து பேசினா .... பேசும்போதே ஸ்பெல்லிங் மிஷ்டேக்கு வந்து கண்புஸ் ஆயி தம்பி நீ என்க்ளிஷே பேசாதே-ன்னு மிரண்டு ஓடுன பர்டின்ங்க தான் சாஸ்தி..

நிலைமை இப்படி இருக்க நானே நான் எழுதுனத படிச்சா காண்டோயிடுவேன்...

நம்ம  எழுதற கோபால் ப்ரோக்ராம் குப்பையை பத்தி எனக்கே ஒன்னும் தெரியதப்போது அத பத்தி என்ன எழுதறது...

இருக்கற குப்பைல நானும் ரெண்டு குப்பையை நானும் போட்டுட்டு வர்ற வேலையை ஏ சி ரூமுல இர்ருந்து பண்ணிட்டு இருக்குற நிலைமையை யாராவது கேட்டா கொமெடி ஆகாது ..??