guru

Sunday, 4 March 2012

சாம் ஆன்டர்சன்


சாம் ஆன்டர்சன்- இந்த பெயரை கேட்ட போதே சிரிப்பு தன்னால வருகிற அளவுக்கு சாம் ஒரு சாதனை பண்ணி இருக்கார் ...

ஒரே படத்துல நிறைய பேரை சிரிக்க வச்சிருக்கார்...

ரொம்ப அப்பாவியா ..வெள்ளந்தியா...இருக்கற அவரை பத்தி கமெண்ட்ஸ் போட்டு இருக்கறவங்களை பார்த்தா கோவமா வருது....

கடைசி பத்து வருசமா எத்தனை பேரு புதுசா அறிமுகம் ஆகி இருப்பாங்க ...
அவங்களையெல்லாம் நாம நியாபகம் வச்சிருக்கமா என்ன...

போன வாரம் விஜய் டிவி ல 'அது இது எது' ல அவரை பார்த்த போது..அவர் இன்னம் அப்படியே தான் இருகார்...டான்ஸ் ஆட கூட இன்னம் வரலை..

நடிப்புன்னு என்னன்னே தெரியாத ஒருத்தரை நடிக்க வச்சா படம் எப்படி வரும்...???  இப்படி தான் இருக்கும்...அதுக்கு அவர் என்ன பண்ணுவார்....

பிளாக் மணி பணபலம் ... அப்பா ப்ரோடுசெர் .... சினிமா பின்புலம்...இப்படஎதுவுமே இல்லாம அவர் எடுத்த ரிஸ்க்-ய் பாராட்டனும்...

அவரை ஸ்க்ரீன்ல பார்த்தா எனக்கு கிண்டல் பண்ண தோணலை....

எவன் எவனோ நடிச்சி....நம்மளை கொடுமை படுத்தும் பொது....

இவரு நடிகரதுல என்ன தப்பு இருக்கு..

சிங்காரவேலன்-ல வடிவேலு கூட பார்க்க நல்லவே இருக்க மாட்டார்...ஆனா காமெடி நல்லா பண்ணி இருப்பார்..அதுமாதிரி இவரும் வரணும்...

விஜயகாந்த் பையன் நடிக்க போறானாம் ... அவனுக்கு இவர் பெட்டெர்....